Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராகுலை விட பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியே தகுதியனவர் என்று, காங்கிரஸ் தலைவர் ஒருவரே கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குஜராத் முதல்வரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விட்டு வெளியில் வந்த சாது யாதவ் 'பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியை விட குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே தகுதியானவர். மோடி மிகவும் அனுபவம் மிக்க திறமைசாலி. பின் வருவதை முன்கூட்டியே  சிந்தித்து செயல்படும் தீர்க்கதரிசி. ராகுலிடம் அவசரமாக நீங்கள் ஒரு உதவி கேட்டால் அவரை சந்திப்பதற்கே மூன்று வருடங்கள் கத்திருக்க வேண்டும. ஆனால் மோடி உடனடியாக உதவிக்கு வந்துவிடுவார்'' என அவர் கூறியுள்ளார்.

காங்கிரசில் இருந்து கொண்டு இப்படி காங்கிரஸ் தலைவருக்கு எதிராக  பேசுகிறீர்களே, இதற்காக கட்சி மேலிடம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

''அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. கட்சி மேலிடம் என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. சோனியா காந்திக்கு நான் ஏன் பயப்பட வேண்டும். இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் தான். ஆனால் அவர தான் பிரதமர் என்பது இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்?, அவரிடம் ஆட்சி அதிகாரம் இல்லை என்பதே உண்மை' என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார். இந்தப் பேச்சால் காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சை எழுந்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மைத்துனனும், பீஹார் காங்கிரஸ் தலைவருமாக இருப்பவர் சாது யாதவ். இவர் ஒரு குடும்ப விழாவில் மோடியை நேரடியாக சந்தித்து 45 நிமிடங்கள் உரையாடியிருந்தார். அப்போது லாலு பிரசாத் யாதவ்வையும் மோடி அவரிடம் நலம் விசாரித்திருந்தார்.

இச்சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதே தவிர இதில் எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லை என சாது யாதவ் தெரிவித்திருந்தார். இதேவேளை சாது யாதவ்வின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை அடுத்து காங்கிரஸ் கட்சி அவரை  எந்த நேரமும் கட்சியிலிருந்து தூக்கிவிடும் நிலை தோன்றியுள்ளது.

0 Responses to ராகுலை விட மோடி சிறந்தவர் : காங்கிரஸ் தலைவர் சாது யாதவ் பேச்சால் திடீர் சர்ச்சை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com