Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி,பங்கு சந்தை வீழ்ச்சி ஆகியவை குறித்து, பிரதமருடன் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து  ஆலோசித்துள்ளார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு  காணாத அளவுக்கு, வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி மும்பை பங்கு சந்தைகளில் கடுமையாக எதிரொலித்தது. பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான வீழ்ச்சி முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதன் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தியுள்ளார். மருந்து துறையில், அந்நிய நேரடி முதலீடு, கொள்கை பற்றி விவாதிக்க நடைபெற்ற இடையே இந்த  கூட்டத்தின் சந்திப்பு நடைபெற்றது.

இது குறித்து பேசியுள்ள மத்திய அதிகாரி ஒருவர், ''உலகமெங்கும் நிலவி வரும் நிலைதான் தற்போது இந்தியாவிலும் நிலவி வருகிறது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப டாலருக்கு நிகரான் இந்திய ரூபாயின் மதிப்பு நிலையான  ஒரு இடத்தை  விரைவில் எட்டிப்  பிடிக்கும்.

தற்போதைய நிலையில் மத்திய அரசும், ரிசர்வ வங்கியும், தங்களது ஆயுதத்தை  பயன் படுத்த விரும்பவில்லை.சிறிய அளவிலான நடவடிக்கைகளையே சார்ந்திருக்க முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு அந்த நடவடிக்கையே வளர்ச்சியை பாதிக்காதவாறு இருக்கும்.

பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி வேண்டுமானால், அரசு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்தி விட முடியும். ஆனால், அது வளர்ச்சிக்கு குந்தகமாக விளையும்.

அமெரிக்காவில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளது என்று கூறும் புள்ளி விவரங்கள், அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன்கள் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதை திரும்ப பெற்றுவிடுமோ, என்று ஏற்பட்டுள்ள அச்சம் ஆகியவையும் கூட ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டிருப்பதற்கும், பங்கு சந்தை சரிவை அடைந்து இருப்பதற்கும் ஒரு முக்கிய காரணமாகும்.

அந்நிய செலாவணி வெளியே செல்வதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த 14ம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கார்பரேட் நிறுவனங்களின் இருப்பு சீட்டுக்களில் உள்ள அழுத்தத்தை குறைக்க ரிசர்வ் வங்கி இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.

0 Responses to ரூபாய் மதிப்பு சரிவு, பங்குசந்தை வீழ்ச்சி எதிரொலி: பிரதமருடம் ப.சிதம்பரம் ஆலோசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com