இலங்கையை ஆளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் இந்திய மீனவர்கள் மாத்திரமின்றி;
இலங்கையின் அனைத்து தரப்பு மக்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்கான இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ளது. ஆனாலும், அதற்கான முறையான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்களை இந்த தேர்தல் வழங்க வேண்டும். அதுவே, எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும் என்று கூறியுள்ளார்.
அத்தோடு, இலங்கையில் எதிர்வரும் ஆண்டு பொதுத் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுக்கும் மக்கள் போராட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு: ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு