Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நெல் வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் அரிசியின் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அரிசி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தற்போது தமிழ்நாட்டுக்கு நெல் வரத்து அதிகரித்து வருகிறது. முன்பு தினமும் 100 லாரிகளில் வந்த நெல்வரத்து, தற்போது 400 லாரிகளாக உயர்ந்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற  மாநிலங்களில் நெல் கிலோவுக்கு 4 ரூபாய் வரை குறைந்துள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் மின் தட்டுப்பாடு குறைந்ததுடன், தென் மேற்கு பருவமழையும் பரவலாக பெய்து வருவதால், அரிசி விலை சரிந்து  வருகிறது. விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்திருந்த நெல் மூட்டை இருப்புக்களை சந்தைக்கு விடுவதாலும் இந்த விலை சரிவு  என்றாலும், இனி வரும் காலங்களில் நெல் விளைச்சல் அதிகரிப்பால் அரிசி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நெல்வரத்து அதிகரிப்பு : தமிழகத்தில் அரிசி விலை சரிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com