இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், விமர்சித்து பாஜக
பதிலடி கொடுத்துள்ளது. சல்மான் குர்ஷித் கரப்பான் பூச்சியைப் போன்றவர்.
அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் அவர் மட்டுமே பிழைத்துக் கொள்வார் என்று பாஜக கிண்டல் அடித்துள்ளது.
சுதந்திர தினத்தன்று, பிரதமரின் உரையை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் நரேந்திர மோடி. மேலும் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு சுதந்திர தின உரையில் சரியான பதிலடி இல்லை என்றும் கூறியிருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,
நரேந்திர மோடி ஒரு கிணற்றுத் தவளை. இப்போதுதான் குஜராத்தில் இருந்து வெளியே எட்டிப் பார்த்து இருக்கிறார். அதுவும் மிரட்சியுடன் உலகத்தைப் பார்க்கத் தொடங்கியுள்ளார். உலக நடப்பு பற்றித் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறார் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள பாஜகவின் பெண் செய்தித் தொடர்பாளரான மீனாக்ஷி , ''சல்மான் குர்ஷித் வெளி நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் போல நடந்து கொள்வதில்லை. வெளி மாநிலங்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் போல செயல் படுகிறார்.
எனவேதான், மோடியை கிணற்றுத் தவளை என்று கூறியுள்ளார். அவர் பிரதமரின் உரையை விமர்சித்தது என்பது சரியாகத்தான் இருந்தது. அப்படிப் பார்க்கப் போனால் சல்மான் குர்ஷித் ஒரு கரப்பான் பூச்சி. அணு ஆயுதத் தாக்குதல் நடந்தால் கரப்பான் பூச்சி மட்டுமே பிழைத்துக் கொள்ள முடியும்.'' என்று விமர்சித்து பேசியுள்ளார். இதனிடையே இவ்வாறன முகம் சுளிக்கவைக்கும் காங்கிரஸ் பாஜக இடையேயான கருத்துக்களால் நாட்டின் அரசியல் இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருப்பதை மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மோடியை விமர்சித்த சல்மான் குர்ஷித்துக்கு பாஜக பதிலடி