Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவிற்கு சட்டத்துக்கு புறம்பாக கடல் மார்க்கமாக ஆட்களை கடத்தும் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட கடற்படையினருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பபே தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டத்துக்கு புறம்பாக அகதிக் கோரிக்கையாளர்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 பேர் அண்மைய நாட்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 3 கடற்படை வீரர்களும் அடங்குகின்றனர். அது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே கடற்படைத்தளபதி மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.

சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 கடற்படை வீரர்களும் கடற்படையின் கீர்த்திக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள், கடற்படையின் விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அத்தோடு, பொலிஸாரும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றார்.

சட்டத்துக்கு புறம்பான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி அகதிக் கோரிக்கைகளுடன் செல்ல முயன்ற 3943 பேரை கடந்த ஒன்றரை வருடங்களில் கடற்படை கைது செய்தது. அத்தோடு, அவர்களை ஏற்றிச் சென்ற 100க்கும் அதிகமான படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஆஸிக்கான ஆட்கடத்தல்களில் ஈடுபடும் கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள் : கடற்படை தளபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com