வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வடக்கு மாகாண சபை உள்ளிட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வடக்கு தேர்தலை கண்காணிப்பதற்கான இந்திய தேர்தல்கள் ஆணையாளர் வீ.எஸ். சம்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையான தன்மையுடன் தேர்தலை நீதியாக நடத்துவதற்கே இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது. அவ்வாறான நிலையில் இந்திய தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வருமாறு அழைத்துள்ளோம். அத்தோடு, சார்க் நாடுகளிலிருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைத்துள்ளதாகவும் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு தேர்தலை கண்காணிக்க இந்தியாவுக்கு அழைப்பு: ஜி.எல்.பீரிஸ்