Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை புதுடில்லியில் இன்று திங்கட்கிழமை காலை சந்தித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார்.

புதுடில்லிக்கான விஜயத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்திய அரசின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசினார். அத்தோடு, புதுடில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.

அதனையடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்து பொதுநலவாய மாநாடுகளுக்கான இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார். இந்தியப் பிரதமர் கொழும்பு பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கோரி வருகின்ற நிலையில் அவருக்கான அழைப்பு நேரடியாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தியப் பிரதமர், ஜி.எல்.பீரிஸ் சந்திப்பு: பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com