Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பாரிய வாக்கு மோசடிகளைச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, அரசாங்கத்தின் ஆதரவாளர்களும்- இராணுவத்தினரும் இணைந்து வாக்காளர் விபரங்களை திரட்டி வருகின்றனர். இதன் மூலம் வாக்களிப்பின் போது மோசடிகள் இடம்பெறலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 எனவே, வடக்கு வாழ் தமிழ் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளில் முக்கியமான ஒன்றான வாக்களிப்பை சரியான நேரத்தில் நீதியான முறையில் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். யாழ்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேசங்களினதும் வாக்காளர் விபரங்களையும் இராணுவமும்- அரசாங்க ஆதரவாளர்களும் திரட்டி வருகின்றனர். அதைக் கொண்டு அந்த வாக்காளர் தொகையினைக் கணக்கிட்டு வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருப்பவர்களுக்குப் பதிலாக மோசடி வாக்களிப்பை செய்ய திட்டமிட்டுள்ளனர். இது, தேர்தல் மோசடிக்கான முயற்சி. எனவே, மக்கள் சரியான தருணத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெருவாரியாக அமைய வேண்டும். இல்லாத பட்சத்தில் சர்வதேசத்திடம் அழுத்தமாக பேச முடியாது போகலாம். எனவே, தமிழ் மக்கள் பெருமெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வடக்கின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு தேர்தலில் பாரிய வாக்கு மோசடிகளுக்கு முஸ்தீபு: சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com