Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலையில் 2006ம் ஆண்டு 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 அதிரடிப் படையினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த பல்லைக்கழக மாணவர் உட்பட 5 தமிழ் மாணவர்கள், அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதிரடிப்படையின் அதிகாரி உட்பட 12 படையினர் மீது இந்த கொலை தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் கொலை தொடர்பாக விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஒன்றை கையளித்திருந்ததுடன் அது இதுவரை வெளியிடப்படவில்லை.
அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரி கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அண்மையில் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தார்.

மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் மாணவர்கள் கொலை தொடர்பாக விசாரணைகளை நடத்துவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்து.

இதேவேளை, மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த வழக்கு துரிதப்படுத்தப்பட்டு, பிணையில் விடுக்கப்பட்டிருந்த நபர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to திருமலை மாணவர்கள் படுகொலை: அதிரடிப்படையினருக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com