Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஏப்பிரல் மாதம் நியூசிலாந்தில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டிருந்தது. இச்சட்டம் நேற்றுத் திங்கட்கிழமை முதல் அமுல் படுத்தப் பட்டது. 

இதனையடுத்து நேற்று மட்டும் 50 ஜோடிகள் ஒரே இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு இதுவரை நோர்வே, சுவீடன், தென்னாப்பிரிக்கா, கனடா, பெல்ஜியம், டென்மார்க் உட்பட 13 நாடுகளில் மட்டுமே சட்ட அங்கீகாரம் உள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருமணங்களில் ரோடோருவா அருங்காட்சியகத்தில் ராச்சல் பிரிஸ்கோ - ஜெஸ் இவெஸ் எனும் பெண் ஜோடியின் திருமணம் தான் நியூசிலாந்தில் நடந்த முதல் ஓரினச் சேர்க்கை திருமணம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டிருப்பதால் அங்குள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் கூட நியூசிலாந்தில் இதற்கு வழி இருப்பதால் அங்கு இடம்பெயர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

0 Responses to ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு நியூசிலாந்திலும் சட்ட அனுமதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com