Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

 வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் அர்ப்பணிப்பான வாக்களிப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும். அதில், எந்தவித சந்தேகமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றகுழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பொய்யான கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 18 தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5 தொகுதிகளிலும் வெற்றிபெறும். மீதமுள்ள தொகுதிகளே எந்தக் கட்சி வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றும் என்பதை தீர்மானிக்கும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெருமா குறிப்பிட்டிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் அர்ப்பணிப்பான வாக்களிப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும். அதில், எந்தவித சந்தேகமும் இல்லை என்று இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

0 Responses to வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும். அதில், சந்தேகமில்லை : இரா.சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com