இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வரவுள்ள ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை, பிரதான எதிர்க்கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியும் சந்தித்து பேசவுள்ளதாக அந்தக் கட்சியின்
பொதுசெலயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.
இலங்கையை தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்க, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத அரசாங்கம் தேவையற்ற குற்றங்களை எதிர்க்கட்சிகளின் மீது சுமத்துவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதியளவில் இலங்கை வரவுள்ள நவநீதம்பிள்ளையைச் சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஐக்கிய தேசியக் கட்சி பூர்த்தி செய்துள்ளதாகவும்- அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை வரும் நவநீதம்பிள்ளையுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சந்திப்பு