Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பின் போது இறுதி மோதல்களில் அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி அல்லது 26ஆம் திகதி நவநீதம்பிள்ளையை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறிய மாவை சேனாதிராஜா, அந்த சந்திப்பின் போது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தம்மிடமுள்ள ஆவணங்களை கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகிறார் என்ற காரணத்துக்காகவே இறுதி மோதல்களின் போது காணாமற்போனவர்கள் பற்றி கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது. இதுவொரு ஏமாற்று நாடகம் என்று அவர் கூறினார்.

 மோதல்கள் முடிவுக்கு வந்து 4 ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் இன்னமும் அறுபது ஆயிரத்துக்கும் அதிகமான வடக்கு மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலேயே இருக்கின்றனர். அத்தோடு, இந்திய அகதி முகாம்களிலுள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரும்பவும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்ப விரும்புகின்றனர். அவர்களின் சொந்தக்காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இலங்கை அரசிடம் அழுத்தம் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் வலியுறுத்தவுள்ளதாக மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பில் நவி.பிள்ளையிடம் சர்வதேச விசாரணையை கோருவோம்: த.தே.கூ

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com