Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் வாழ்க, பிரபாகரன் வாழ்க, தமிழ் ஈழம் மலரட்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ கோஷம் எழுப்பியமைக்காக அவர்மீது வழக்கு தொடர்வது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங், தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமான நிலையம் அருகே ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் வைகோ, மத்திய அரசு இலங்கை அரசு மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

அப்போது, "விடுதலைப் புலிகள் வாழ்க, பிரபாகரன் வாழ்க, தமிழ் ஈழம் மலரட்டும், விடுதலைப் புலிகள் வெல்லட்டும்� என்று, இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான கோஷங்களை, வைகோ எழுப்பினார்.

இந்த கோஷங்களை அப்படியே உளவுப் பிரிவினர் குறிப்பெடுத்துக் கொண்டனர். இது குறித்து திருச்சி மாநகர பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக, இது போன்ற நேரங்களில் பேசுவது சட்டப்படி தவறு தான். ஆயினும், தற்போது தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றன.

வைகோ பேசியதை, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அறிக்கையாக அனுப்பி விடுவோம். அதன் மீது நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடர்வது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Responses to விடுதலைப் புலிகள் வாழ்க! பிரபாகரன் வாழ்க! என பேசிய வைகோ: வழக்கு தாக்கல் செய்வது அரசின் கையில்: தமிழக காவல்துறை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com