Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்காத அபிவிருத்தியின் மூலம் நிலையான சமாதானத்தை அடைய முடியும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன, மத, குல பேதங்களை மறந்து எல்லோரும் இணக்கமாக வாழ முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

 வவுனியாவில் ஆடைகளை உற்பத்தி செய்யும் இத்தாலிய நிறுவனமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மோதல்களின் முடிவுக்கு பின்னர் வடக்கில் ஆரம்பிக்கப்படுகின்ற மிகப்பெரிய வெளிநாட்டு தொழிற்சாலையாக இது கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில் 250 பெண்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் 3000 பெண்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to அபிவிருத்தியின் மூலம் சமாதானத்தை அடைய முடியும்: மஹிந்த ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com