Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் பிரபல ஆன்மீக குரு ஆசரம் பாபுவுக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் உள்ள ஆசிரம ஹாஸ்டலில் தங்கியிருந்த 16 வயது இளம் பெண் ஒருவர் இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கம்லா மார்க்கெட் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்ததன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பேருந்தில் வைத்து டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, அப்பெண், தன்னை பாலியல் பலாத்காரப்படுத்தியவர்களிடம், சகோதரர்களாக நினைத்து கெஞ்சியிருக்க வேண்டும், இதன் மூலம் அவர் தனது கௌரவத்தையும், உயிரையும் பாதுகாத்திருக்கலாம் என ஆசரம் பாபு சொன்ன கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. எனினும் இக்கருத்துக்களை வாபஸ் பெற அவர் மறுத்துவிட்டதை தொடர்ந்து அவர் மீது காவல்துறை சம்மன் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ஆசரம் பாபு மீது தற்போது இப்புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

0 Responses to டெல்லியில் பிரபல ஆன்மீக குரு ஆசரம் பாபு மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com