Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிலுள்ள கச்சைக்கொடி உள்ளிட்ட சில கிராமங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் செய்யப்படுவதாக குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை இன்று புதன்கிழமை முன்னெடுத்தது.

அரச காணிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அத்துமீறிய குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால், அந்தப் பகுதியில் நீண்ட காலமாக வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நடத்திய ஆர்ப்பாட்ட போராட்டத்தில் அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் பொன். செல்வராசா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை - மஹா ஒயா வீதியின் 19ஆம் மற்றும் 20ஆம் மைல்களிலுள்ள கெவிலியாமடு, புழுகனாவ ஆகிய கிராமங்களில் ஏற்கனவே 15 நிரந்தர வீடுகளும், குடிசைகளும் அரசாங்க காணியில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதேச மக்கள், புதிதாக 21 நிரந்தர வீடுகளுக்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். அத்தோடு, இந்த அத்துமீறல் செயற்பாடுகளின் பின்னால் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பௌத்த பிக்கு ஒருவரே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

0 Responses to மட்டக்களப்பு பட்டிப்பளையில் அத்துமீறிய குடியேற்றங்களை எதிர்த்து த.தே.கூ போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com