Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான தவுலத் பெக் ஓல்டி எல்லை பகுதியில் உள்ள விமான தளத்தில் இந்தியா தனது சூப்பர் ஹெர்குலிஸ் விமானப்படை போர் விமானத்தை நிறுத்தியுள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனப் படையினர், 21 நாட்கள் கூடாராங்கள் அமைத்து தங்கியிருந்தனர். பின்னர் இந்திய - சீன இரு தரப்பினதும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு  சீன இராணுவம் தனது படைத் துருப்புக்களை வாபஸ் பெற்றது.

எனினும் மீண்டும் பல தடவைகள் சீனத் துருப்புக்கள் இந்திய எல்லைக்குள்  வர முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையிலேயே இந்தியா தனது அதிகூடிய தொழில்நுட்பத் திறன் வாய்ந்த போர் விமானமான சூப்பர் ஹெர்குலீஸை எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளது.

உலகின் மிக உயரமான ஓடு தளமாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,614 அடி உயரத்தில் இருக்குறது குறித்த தவுலத் பெக் ஒல்டி விமான ஓடு தளம்.

இங்கு இவ்விமானத்தை களமிறக்கியுள்ளதன் மூலம் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்வதற்கும், தளவாடங்களை கொண்டு செல்வதற்கும், அதி நவீன தகவல் தொடர்பு வசதிக்கும் இது மிகவும் உதவியாக இருக்கவுள்ளது. மேலும், இந்த விமானத்தை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகில் நிறுத்தியிருப்பது இந்திய துருப்புக்களுக்கு மனதளவில் மிகுந்த உறுதியை, நம்பிக்கையையும் அளித்துள்ளது.

0 Responses to இந்திய - சீன எல்லை பகுதியில் சூப்பர் ஹெர்குலிஸ் போர் விமானத்தை நிறுத்தியது இந்தியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com