Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
 கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறலைத் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

முதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர்  இந்திய வீரர்கள் இருவரின் தலையை துண்டித்தது, பின்னர் அத்துமீறித் தாக்குதல்  நடத்தியது, தற்போது எதிர்பாராத விதமாக எல்லையை ஊடுருவி, தாக்குதல் நடத்தி, இரண்டு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது என்று பல அத்துமீறலகளை பாகிஸ்தான் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

இதற்கு  பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடியாது என்று, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது என்று தமது கருத்தைக் கூறி, பாஜகவின் எதிர்ப்பை ஆமோதித்து இருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் அதிபர் நவாஸ் ஷெரீப், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள இந்தியா, பேச்சுவார்த்தைக்கு உண்டான சூழலை உருவாக்கித் தருமாறு சூசகமாகத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 

0 Responses to பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் செரீஃப் விருப்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com