மற்றாஸ் கஃபே என்னும் திரைப்படத்தை மகிந்த ராஜபக்ஷவின்
நெருங்கிய நண்பரும், ஹிந்தி நடிகருமான ஜோன் ஏபிரகாம் இயக்கியிருந்தார்.
அதில் விடுதலைப் புலிகளை ஒரு படு பயங்கரவாத இயக்கமாக அவர்
சித்தரித்துள்ளதோடு, புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்பது போல
படத்தையும் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை இவர் தயாரித்து இயக்க முன்னர் ,
ஜோன் ஏபிரகாம் பல தடவை இலங்கை சென்று வந்துள்ளார். அவர் மகிந்த
ராஜபக்ஷவிடம் பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டே இப் படத்தை இயக்கியதாக
தற்போது புகார் கிளம்பியுள்ளது.
மற்றும் சர்சைக்குரிய ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இவர் இத் திரைப்படத்தில் சில காட்சிகளை புகுத்தியுள்ளதால், அது பல விளைவுகளை தோற்றுவிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரிக்க இவ்விரு நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இப் படத்தை குறித்த தேதியில் தமிழ் நாட்டில் வெளியிட முடியாத நிலை தோன்றியுள்ளது. எழிலரசு என்பவரே சென்னை உயர் நீதிமன்றில் இதுதொடர்பான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இத்திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிட விடமாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

0 Responses to "மற்றாஸ் கஃபே" க்கு வைக்கப்பட்டது ஆப்பு!