Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை வியாழக்கிழமை மேற்கொண்டிருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களுடன் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான உயர் மட்ட பேச்சுவார்த்தையினை இன்று மேற்கொள்கிறார்.

2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஆப்கான் எல்லைப் பகுதியில் அமெரிக்க டிரோன் விமானங்கள் நடத்திய வா இன்வெளித் தாக்குதலில் 24 பாகிஸ்தான் படை வீரர்கள் கொல்லப் பட்டதை அடுத்து முறுகல் அடைந்திருந்த பாகிஸ்தான் அமெரிக்க இராஜதந்திர உறவுகளைச் சரி பண்ணுவதற்கே முக்கியமாக இந்த விஜயம் அமைந்துள்ளது.

அதே ஆண்டு மே மாதம் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து சுயமாக சுட்டுக் கொன்றதும் இரு தரப்பு உறவினைப் பாதித்திருந்தது. இவ்வாறு குலைந்திருந்த இரு தரப்பு உறவுகளையும் சரிப் படுத்துவதற்காக அமைந்திருந்த இந்த விஜயத்தில் கெர்ரி பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இராணுவத் தளபதி கயானி ஆகியோரை இன்று சந்திப்பதுடன் அவர்களுடன் அமெரிக்காவின் இராணுவ முன்னெடுப்பு, பழங்குடியினப் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் தொடர்ச்சியான டிரோன் தாக்குதல்களை நிறுத்துவது, எரிபொருள் ஓப்பந்தம், வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துகின்றார்.

ஏற்கனவே பாகிஸ்தானில் அமெரிக்க புலனாய்வுத் துறையான சி ஐ ஏ நடத்தி வரும் டிரோன் விமானத் தாக்குதல்களில் 2004 தொடக்கம் 2013 வரையில் 3460 பொது மக்கள் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாகிஸ்தான் அரசின் அமெரிக்காவுடன் தங்கியிருக்கும் தன்மையை மேலும் உறுதிப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ள ஜோன் கெர்ரியின் இந்த விஜயம் தொடர்பாக சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சமீபத்தில் சீனா சென்றிருந்த போது பாகிஸ்தானுக்குப் பொருளாதாரம் உட்பட பல துறைகளில் தான் உதவி செய்யப் போவதாக சீனா சம்மதம் தெரிவித்திருந்தது.

நாளை வெள்ளிக்கிழமை கெர்ரி லண்டனுக்குப் பயணிக்க உள்ளதுடன் அங்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஷாயேட் அல் நஹ்யானைச் சந்தித்து எகிப்து, சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சமாதானத்தைக் கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

0 Responses to பாகிஸ்தானில் மேற்கொள்ளப் பட்டு வரும் டிரோன் விமானத் தாக்குதல்கள் நிறுத்தப் படும்: ஜோன் கெர்ரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com