Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த 5 ஆண்டுத் திட்டத்தில் நாட்டின் மின் உற்பத்தி இலக்கு ஒரு லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என்று,
திருமயத்தில் பெல் நிறுவன கிளையைத் துவைக்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங் தமது உரையில் கூறியுள்ளார்.

புதுகோட்டை மாவட்டம் திருமயத்தில் பெல் நிறுவனத்தின் பாய்லர்  ஆலையைத் திறந்து வைத்து பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார். அபோது நாட்டின் பொருளாதாரத் தேவைகளை உற்பத்தி செய்ய மின் திட்டங்கள் அதிகம்  தேவை கூறினார். மேலும், அடுத்த 5 ஆண்டுத் திட்டத்தில் நாட்டின் மின் உற்பத்தில் திறன் இலக்கு ஒரு லட்சம் மெகாவாட் உற்பத்தியாக இருக்கும் என்றும், சூரிய மின் சக்தி திறனும் 20 ஆயிரம் மெகாவாட் திறன் என்பது இலக்கு என்றும் கூறியுள்ளார்.

இன்று காலை 11 மணி அளவில் திருச்சி வந்தடைந்த பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கைத் தமிழர்களை காக்கத் தவறியதாகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்தும் காப்பாற்றத் தவறியதாகவும் மன்மோகன் சிங்குக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கருப்பு கொடி காண்பித்த மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் அவரது தொண்டர்கள், நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்குடன் மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி உள்ளிட்டவர்களும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to அடுத்த 5 ஆண்டுத் திட்டத்தில் நாட்டின் மின் உற்பத்தி இலக்கு ஒரு இலட்சம் மெகாவாட் : புதுக்கோட்டையில் பிரதமர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com