Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாதென ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் தேர்தல் வன்முறை, தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.யாழ்.மாவட்டத்துக்கு நேற்றுப் புதன்கிழமை வருகை தந்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய யாழ்.பொது நூலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.நாவாந்துறையில் இராணுவத்தினரின் நிகழ்வில் ஆளும் கட்சி வேட்பாளர் கலந்துகொண்டமை, அதனை அறிந்து அங்கு சென்ற தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் படையின ரால் மிரட்டப்பட்டமை தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது ஆணை யாளரிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் கள் ஆணையாளர் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரி எனக்கு அருகில்தான் அமர்ந் திருக்கிறார். இன்றுவரை அவர் அப்படிப்பட்ட முறைப்பாடு எத னையும் செய்யவில்லை என்றார். இதன்போது தேர்தல்கள் ஆணையாளர் அருகிலிருந்த படையினரால் மிரட்டப்பட்ட அதிகாரி சிரித்தபடி பேசாமல் இருந்தார். முறைப்பாடு செய்ய முடியாதளவுக்கு இராணுவத்தினர் அந்த அதிகாரியை மிரட்டியுள்ளனரா? என்று ஊடகவியலாளர்கள் ஆணையாளரிடம் பதில் கேள்வி எழுப்பினர். இதற்கு தேர்தல் திணைக்கள அதிகாரிகள் அப்படியயாரு சம்பவம் இடம் பெற்றால் முறைப்பாடு செய்யமாட்டார்கள் என்று நினைக் கிறீர்களா என ஊடகவியலாளரைப் பார்த்துக் கேட்ட தேர்தல்கள் ஆணையாளர் நீங்கள் ஊடகவியலாளரா? பொலிஸாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்படியானால் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையா? என்று ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். இதற்குத் தேர்தல்கள் ஆணையாளர் நீங்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. சில கேள்விகளுக்கு விசாரணைகள் முடிந்த பின்னர்தான் பதிலளிக்க முடியும். மேற்படி சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திக் குறிப்புடன் இரு பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை முடிந்த பின்னர்தான் பதிலளிக்க முடியும் என்றார்.

0 Responses to கேட்பதற்கெல்லாம் பதில் கூறமுடியாது! தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தினில் தெரிவிப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com