Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவுக்கான இராஜதந்திர பயணமொன்றை மேற்கொண்டுள்ள எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்திய ஜனாதிபதி பிரணாப் முஹர்ஜியை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

 இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் இலங்கை- இந்திய பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஸ்வந்த் சிங்ஹா உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ரணில் விக்மரசிங்க நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து பேசியிருந்தார். இதனிடையே, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை இன்று புதன்கிழமை சந்தித்து பேசவுள்ளார்.

இந்தியாவுக்கான இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, இலங்கையை தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்திய ஜனாதிபதி பிரணாப் முஹர்ஜி - ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com