Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இயக்குநர் சேரன் மகள் தாமினி, சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார். இதைதொடர்ந்து சேரன் போலீசில் அளித்த புகாரில்,  சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலிங் அளித்தனர். கல்லூரி படிப்பை  முடித்த பின்னர் காதலை பற்றி சிந்திக்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் தாமினி காதலன் சந்துருவு டன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார்.

இதனால் அவரை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே சந்துருவின் தாய் ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர்.

இதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் தனது குடும்பத்தினரை பிரிந்து  வெளியில் தங்கியுள்ளார். தலைமை ஆசிரியரின் வீட்டில் தாமினி தங்கி இருந்த போது அவருக்கு தினமும் கவுன்சிலிங் அளிக்கப் பட்டுள்ளது. இதனால் தாமினி மனம் மாறியுள்ளாரா? என்பது தெரியவில்லை.


இந்நிலையில் இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது தாமினி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

 நாளை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது நீதிபதிகள் அவரிடம் யாருடன் செல்ல விரும்பம்? என்று கேட்க உள்ளனர். இதற்கு தாமினி என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 Responses to சேரன் மகள் தாமினி நாளை கோர்ட்டில் ஆஜராகிறார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com