சிவகங்கை தாலுகா
பாப்பான்குளம் கிராமத்தில் தலித் மக்களுக்கு அரசாங்கம் கட்டி கொடுத்த 5
வீடுகள் உள்ளிட்ட 22 வீடுகளை இடித்து தரை மட்டமாக்கிய செயலுக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பீம்ராவ், மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.கே.
மாணிக்கம் ஆகியோர் பாப்பான்குளம் கிராமத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் தலித் மக்களிடம் ஆறுதல் கூறி விபரம் கேட்டறிந்தார்கள்.
பாப்பான்குளம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி எம் எல் எ பீம்ராவ் பேசும்போது, தமிழக அரசு ஏழை எளிய
மக்களின் நன்மைக்காக நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரு கிறார்கள்.
தமிழக
அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு
வருவாய்த்துறையும், காவல்து றையும், ஊராட்சி நிர்வாகமும் கூட்டாக
செயல்பட்டு சட்ட விரோதமாக தலித் மக்களின் வீடுகளை இடித்திருக்கிறார்கள்.
பாப்பான்குளம் தலித் மக்கள் வீடுகளை இடித்தது தொடர்பாக சட்டமன்றத்தில்
தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார்.
0 Responses to அரசு கட்டி கொடுத்த தலித் வீடுகளை இடித்த கொடுமை