Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப் படவில்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்க உள்ள காமன் வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லலாம் என்று காங்கிரஸ் உயர்நிலைக் குழு நேற்று கூடி முடிவெடுத்துள்ள நிலையில், இன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தார். காமன் வெல்த் மாநாட்டுக்கு செல்ல வேண்டாம் என்றும்,

தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தாங்கள் முடிவெடுக்க வேண்டும் என்றும் பல விஷயங்கள் குறித்துட் தாம் பேசப் பேச பிரதமர் உன்னிப்பாக கவனித்து வந்தார் என்றும், கடைசியில் தமிழர்களின் உணர்வுகளை மதித்துச் செயற்படுவதாகவும் பிரதமர் கூறியதாக வாசன் கூறியுள்ளார். மேலும் பிரதமரிடம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் தாம் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக வாசன் கூறியுள்ளர்.

0 Responses to பிரதமர் காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை: ஜி.கே.வாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com