இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து
மீன்பிடித்தலில் ஈடுபடுவது வடக்கு மாகாண மீனவர்களை கடுமையாக பாதிப்பதாக
வடக்கு மாகாண சபையின் மீன்பிடித்துறை அமைச்சரான பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கடல்வளத்தை அழிக்கும் ஆழ்கடல் தரை வாரும் (Bottom Trawling) மீன்பிடித்தல் முறையை கொண்டு தொழில் ஈடுபடுகின்றனர். குறித்த தொழில்முறமை இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாரத்துக்கு மூன்று நாட்கள் ஆழ்கடல் தரைவாரும் முறையில் மீன்பிடிக்க இந்தியாவில் அனுமதியில் உள்ளது. இதனால், இந்திய மீனவர்கள் அத்துமீறுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் வடக்கின் கடல்வளத்தை அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வடக்கு மாகாணத்தின் மன்னார், பேசாலை, பள்ளிமுனை, முத்தரிப்புத் துறை, வடமராட்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு வந்து மீன்பிடித்துச் செல்வதை இந்திய மீனவர்கள் தமது பாரம்பரிய உரிமையாகக் கருதமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமைகளையடுத்தே, தமிழகம் சென்று முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான தமிழக அரசாங்கத்துடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும், தமிழக கரையோர சமூகங்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் மீன்பிடித்துறை அமைச்சரான பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய அரசாங்கமும், மத்திய மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவும், இந்திய மீனவர்களின் வருகையைத் தடுக்கும் விடயத்தில் தம்மோடு ஒத்துழைத்துச் செயற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கை இலங்கை மீனவர்களை பாதிக்கிறது : பா.டெனீஸ்வரன்