Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு, இந்த கலவரத்தில் 4 பேர் பலியானதாகத் தெரிய வருகிறது. எனவே, அங்கு போலீசார் குவிக்கப் பட்டு உள்ளனர்.

கடந்த மாதம் உபியின் முசாபர் நகரில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்  மூண்டது. இந்த மோதல் கலவரமாக வெடித்ததில் 40 பேர் பலியானார்கள். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, ராணுவம் குவிக்கபட்டது.

இந்நிலையில்  உபியின் முசாபர் நகர் புதானாவில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது.இந்த கலவரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டு, மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கலவரத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

0 Responses to முசாபர் நகரில் மீண்டும் கலவரம் : 4 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com