திமுக தலைவர் கலைஞர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி :
இலங்கையில்
நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று
தமிழகச் சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பற்றி
உங்கள் கருத்து என்ன?
அதை
நான் வரவேற்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற
நோக்கத் தோடுத்தான் இன்றைக்கும் தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு இன்று நிறைவேற்றியுள்ள
தீர்மானத்தைப் போல இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் அது இலங்கையிலே உள்ள
இலங்கைத் தமிழர்களுக்குப் பெரிதும் ஆதரவாக அமையும்.
ஏற்காடு இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் செல்கிறீர்களா?
இன்னும் முடிவெடுக்கவில்லை.
வரும்
30ஆம் தேதியன்று மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசிக்க டெல்லியில்
கூடுகின்ற கூட்டத்திற்கு உங்கள் கட்சிக்கு அழைப்பு வந்திருக்கிறதா?
இதுவரையில் அழைப்பு வரவில்லை.
காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்த அந்த மூன்றாவது அணி பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்தியாவின் நன்மைக்காக எந்த அணி அமைந்தாலும், அந்த அணியை நான் வரவேற்கிறேன்.
அந்தக் கூட்டத்திற்கு உங்களை அழைத்தால் செல்வீர்களா?
அழைத்தால் அதைப் பற்றி எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி கலந்து பேசி முடிவெடுக்கும்.
0 Responses to இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றுதான் தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது : கலைஞர்