Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை தூதர் பிரகாஷ் கரியவாசம், காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளார்.  கரியவாசத்தின் இந்த பேச்சிற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

பீட்டர் அல்போன்ஸ் ( காங்கிரஸ் மூத்த தலைவர் )
இந்தியப்பேரரசு இலங்கைத்தூதுவர் ஒருவர் சொல்கிறார் என்பதற்காக ஒரு முடிவினை எடுக்காது.    இந்த விசயத்தை பொறுத்தவரை இந்தியப்பேரரசு எடுக்கின்ற முடிவு தமிழக  மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டதாகத்தான் இருக்கும். 


இந்த கருத்தைதான் பாரத பிரதமர் டாக்டர் கலைஞருக்கு எழுதிய கடிதத்திலே 
குறிப்பிட்டிருக்கிறார்.  தமிழக அரசியல் தலைவர்களுடைய உணர்வுகளையும், தமிழர்களின்  உணர்வுகளையும்,   உள்வாங்கிக் கொண்டு சரியான முடிவெடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆதலால் இலங்கைத்தூதரின் கருத்தை நாம் முக்கியமானதாக கருதவேண்டியதில்லை.

மனுஷ்யபுத்திரன் ( எழுத்தாளர் )
   இலங்கை தூதரின் கருத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று பீட்டர் அல்போன்ஸ் சொல்லியிரு க்கிறார்.  உண்மையிலேயே காங்கிரஸ் அரசாங்கம்  இலங்கை அரசினுடைய எல்லா கருத்துக்களையுமே பொருட்படுத்தி வந்திருக்கிறது.   மாறாக தமிழகத்தில் இருந்து  நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள், தமிழகத்தில் இருந்து சொல்லப்படுகின்ற உணர்ச்சிகள்,  இதைத்தான் காங்கிரஸ் அரசாங்கம் இதுவரை பொருட்படுத்தாமல் இருந்து வந்திருக்கிறது.   அந்த வகையில்தான் மிக செல்லமாக காங்கிரஸ்காரர்கள் இதை  தட்டிவிட விரும்புகிறார்கள்.
உண்மையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய, ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம்,  ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகின்றது என்றால்,   அந்த தீர்மானத்திற்கு பதில் அளிக்க வேண்டியது இந்திய அரசாங்கமும், காங்கிரஸ் கடியுமே தவிர,  இலங்கைத்தூதர் அல்ல. 

அப்படி என்றால் இந்தியாவில் இருந்துகொண்டே இலங்கை தொடர்பான அத்துனை
விசயங்களுக்கும் இவர் கருத்து தெரிவிப்பாரேயானால்,  சிங்களர்களையும் தமிழர்களையும் பிரிக்கும் முயற்சியில் இதே நபர் முன்பு ஈடுபட்டார்.  இது போல திட்டமிட்டு தொடர்ந்து  தமிழர்கள் சார்ந்த விசயங்களில்  விஷமப்பிரச்சாரம் செய்வதற்காக இலங்கைத்தூதர் செயல்பட்டு வருகிறார்.  உண்மையில் இது அவருடைய பொறுப்பிற்கு மிகவும் சம்பந்தமில்லாத விசயம்.   இதற்கு கடுமையான எதிர்வினையாற்றாவிட்டால் அவர்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான விசயங்களில் அதிகார மட்டங்களில் செய்துகொண்டிருப்பார்கள். 

வானதி ஸ்ரீனிவாசன் ( பாஜக - தமிழக செயலாளர் )
இந்திய நாட்டிலேயே இருந்துகொண்டு இந்தியாவுக்கு சவால் விடுக்கும் அளவில் பேசியிருக்கூடிய இவரை இலங்கை அரசாங்கம் கண்டிக்க வேண்டும்.   ஒரு நாடு முடிவு எடுக்கும்  முன்பு இவர் தலையிட்டு, தனது பொறுப்பிற்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் பேசியதை இலங்கை அரசாங்கம் கடுமையாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 Responses to இந்தியா தனிமைப்படுத்தப்படுமா? : இலங்கைத்தூதருக்கு கண்டனங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com