Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

படைத்தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினில் எஞ்சியுள்ள பொதுமக்களது வீடுகளையும் இடித்து தள்ளும் நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகார்களையடுத்து சம்பவ இடங்களை நேரினில் பார்வையிடச்சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வடமாகாண உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் படை அதிகாரிகளது கொலை மிரட்டலுக்குள்ளாகி திரும்பியுள்ளனர்.

வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் கட்டுவன் வடக்குப்பகுதியினில் எஞ்சியுள்ள பொதுமக்களது வீடுகளையும் இடித்து தள்ளும் நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.முன்னரங்க பாதுகாப்பு வேலியை அண்மித்தே இத்தகைய இடித்தழிப்பு தொடர்வதால் உள்ளே அனைத்தும் இடித்தழிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வாறு எஞ்சிய பொதுமக்களது வீடுகள் இடித்தழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் வீதிகிளினில் இறங்கி போராட்டங்களில் குதித்ததனையடுத்து அப்போது இம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது.தற்போது மீண்டும் இடித்தழிப்பு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையினில்  இன்று காலை  கிடைக்கப்பெற்ற புகார்களையடுத்து சம்பவ இடங்களை நேரினில் பார்வையிடச்சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் வடமாகாண உறுப்பினர்கள் சித்தார்த்தன் சிவாஜிலிங்கம் மற்றும் கஜதீபன் ஆகியோருடன் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சஜீவன்  ஆகியோரும் சென்றிருந்தனர்.

பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே அவர்கள் நேரினில் பார்த்திருக்க படையினர் மும்முரமாக பொதுமக்களது வீடுகளை உடைத்துக்கொண்டிருந்துள்ளனர்.கூட சென்ற பத்திரிகையாளர்கள் சிலர் அதனை புகைப்படம் பிடிக்கவும் முற்பட்டுள்ளனர்.இவ்வேளையினில் அனைவரையும் சுற்றிவளைத்துக்கொண்ட படையினர் அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.அவ்வேளையினில் தன்னை ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என சரவணபவன் அடையாளப்படுத்த முற்பட அதை பாராளுமன்றத்தினில் போய் கூறுங்கள்.இங்கு நான் தான் பெரியவனென்று பாய்ந்து வீழ்ந்தார் படை அதிகாரியொருவர்.

பத்திரிகையாளர்களால் அங்கு  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் கமராக்களினிலிருந்து பலவந்தமாக அழிக்கப்பட்டிருந்தது.அத்துடன்  அவர்களது கைத்தொலைபேசிகளும் சோதிக்கப்பட்டதுடன் தகவல்கள் திரட்டப்பட்டு குறித்த செய்திகளோ புகைப்படங்களோ வெளியானால் நீங்கள் கொல்லப்படுவீர்களென மிரட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே படையினரது சிவில் நிர்வாக காரியாலத்தினை சேர்ந்த படை அதிகாரியொருவர் நேரடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரசுரிக்கவேண்டாமென ஊடக நிறுவனங்களை அன்புடன் பணித்துள்ளார்.மிரட்டல்களையடுத்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வடமாகாண உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் வாக்குவாதங்களினில் ஈடுபட்டுவிட்டு வெளியேறியுள்ளனார்.எனினும் இடித்தழிக்கும் நடவடிக்கைகள் தொடர்;ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.


0 Responses to வலி.வடக்கினில் தொடரும் இடித்தழிப்பு! பார்வையிடச்சென்ற கூட்டமைப்பினர் விரட்டியடிப்பு!! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com