வலி.வடக்கினிலுள்ள காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படவுள்ளது. விரைவினில் இந்நடவடிக்கைகள் பூர்த்தியாகும்.அதன் பின்னர் எமது படையினரது குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்படவுள்ளது.
இனியும் நாங்கள் இங்கே குடும்பங்கள் அங்கேயென இருக்கமுடியாதென தெரிவித்தார் பிரிகேடியர் நிசங்க. வலி.வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதியினில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் 513 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான அவர் பத்திரிiகாயளர்களிடம் கருத்து வெளியிடுகையினில் இவ்வாறு தெரிவித்தார்.தற்போது காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய அதிகாரி கடைமையிலிருந்து விலகி சென்றுள்ளார்.
அவரது இடத்திற்கு இன்னொருவர் நியமிக்கப்பட்டதும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பூர்த்தியாகும்.அதன் பின்னர் பாதுகாப்பு வலயம் என்ற பேச்சுக்கே இடமிருக்கப்போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வலி.வடக்கு பாதுகாப்பு வலயத்திற்குள் பொதுமக்களது விடுகள் படையினராலுடைக்கப்படுவது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிகையாளர்களை மிரட்டுகையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளியே பத்திரிகையாளர்கள் நேரினில் பார்த்திருக்க படையினர் மும்முரமாக பொதுமக்களது வீடுகளை உடைத்துக்கொண்டிருந்துள்ளனர். பத்திரிகையாளர்கள் சிலர் அதனை புகைப்படம் பிடிக்கவும் முற்பட்டுள்ளனர். இவ்வேளையினில் அனைவரையும் சுற்றிவளைத்துக்கொண்ட படையினர் அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.இவ்வேளை அங்கு வந்திருந்த பிரிகேடியர் நிசங்க இத்தகவல்களை வெளியிட்டார்.
பத்திரிகையாளர்களது கமராக்கள் பறிக்கப்பட்டு அதிலிருந்த படங்கள் படையினரால் அழிக்கப்பட்டிருந்தது.ஒலிப்பதிவுகளும் அழிக்கப்பட்டது. அதே வேளை பத்திரிiகாயளர்களிற்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் நிசங்க இச்சம்பவம் தொடர்பாக செய்திகளை வெளியிட்டாலோ புகைப்படங்களை வெளியிட்டாலோ நடக்கப்போவதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்.எனக்கு பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவர் பற்றியும் தெரியும்.அவர்களை எவ்வாறு கையாள்வதென்பதும் தெரியுமெனவும் அவர் மிரட்டியுள்ளார்.
பெரும்பாலான வீடுகள் எந்தவித சேதமுமின்றி காணப்பட்டன.இவை கூட ஓடுகள் மற்றும் பொருத்துக்கள் களற்றப்பட்ட பின்னரே கனரக வாகனங்கள் மூலம் இடித்தழிக்கப்பட்டிருந்தது.படை அதிகாரிகளது நேரடி மேற்பார்வையினில் இவை இடித்தழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பத்திரிகையாளர்களிற்கு பாடம் படிப்பிப்பேன்! இலங்கை இராணுவ அதிகாரி அறிவிப்பு!!