மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக
சி.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும், அவர்
அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்ற வடக்கு முதலமைச்சர் ஜனாதிபதியின் முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது நற்செய்திதான். ஆனால், அது அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாணங்களின் முதலமைச்சர்களும் அரசியலமைப்பின் வரம்புகளுக்குள்ளேயே செயற்திட்டங்களையும், நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும். அது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் பொருந்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அரசியலமைப்பை மீறினால் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: கெஹலிய ரம்புக்வெல