Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கிலேயே கூட்டு எதிரணியினர் திட்டமிட்டு இவ்வாறான சதி செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் காலங்களில் அரசியல் செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினருக்கு ஆலோசணை வழங்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனினும், கூட்டு எதிரணியினர் நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி ஸ்திரமற்ற நிலை யை உருவாக்கும் சதித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.  அதேவேளை, அரசாங்கத்தின் ஐந்து வருட ஆட்சிக் காலத்திற்கு முன்னதாக அரசாங்கத்தை கவிழ்க்க எவராலும் முடியாது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

0 Responses to நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த மஹிந்த தரப்பு முயற்சி: துமிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com