Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறிப்பாக, காணி- பொஸில் அதிகாரங்களை சட்டரீதியாக நடைமுறைப்படுத்துவோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்துக்கு மாகாண சபைகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் காட்டிலும், மத்திய அரசாங்கம் மாகாண சபைகளுடன் அதிகாரங்களைப் பகிர வேண்டும். அதுவே, அதிகாரப்பரவலாக்கத்தின் அடிப்படை. அதனை மத்திய அரசாங்கம் அறிய முற்படவில்லை என்பதை நாம் வெளிப்படுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான செயலமர்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தாயொருத்திக்கு ஒன்பது குழந்தைகள் இருக்கும்போது, அதில் ஒரு குழந்தை சற்று ஊட்டக்குறைவுடன் இருந்தால், தாய் அந்தக் குழந்தையை சற்றுக் கூடிய சிரத்தையுடன் கவனிப்பாள். எனவே அரசாங்கம் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண சபைக்கு போதியளவு நிதி உதவிகளை ஒதுக்குவது  அதிமுக்கியமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to காணி, பொலிஸ் அதிகாரங்களை சட்டரீதியாக நடைமுறைப்படுத்துவோம்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com