Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதால் அங்கிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளார்கள் என்று கருத முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டிருக்க வேண்டும் என்பதே அங்குள்ள 80 வீதமான மக்களின் எதிர்பார்ப்பாகும். குறித்த விடயம் சுயாதீனமான இரண்டு அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பேசிய போதே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை தொடர்ந்தும் விடுவித்து வருகிறோம். மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள குறுகிய காலத்திற்குள் அவற்றை செய்து வருகிறோம். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இந்தியா சென்று இரா.சம்பந்தன் வேறுவார்த்தைகளில் பேசுகிறார். ஆனாலும், ஒரே இரவில் இராணுவத்தை முற்றுமுழுதாக அகற்றவும் முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு யாரும் கோர முடியாது: கோத்தபாய ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com