Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை மக்கள் புரிந்து கொண்டு, அந்த கட்சிகளை விலக்கித் தள்ள வேண்டும் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ராகுல் காந்தி, பயங்கரவாதம் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று, தமது நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி அசை போட்டார்.

தனது பாட்டி இந்திராகாந்தியின் பாது காவலர்களுடன் தாம் விளையாடிய அனுபவம் உண்டு என்றும், பின்னர் ஒருநாள் தாம் பள்ளியில் இருந்த போது, பாட்டி சுடப்பட்ட செய்தி கேட்டு, ஆசிரியர் தம்மை வீட்டுக்கு அனுப்பி வைத்ததையும், தாம் வந்து பார்த்த போது பட்டி ரத்த  வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து நின்றதும், அதைவிட பாட்டியின் பாதுகாவலர்களே பாட்டியை சுட்டது கேட்டு மேலும் தாம் அதிர்ச்சியில் உறைந்து நின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போல தமது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும் பயங்கரவாதம்தான் காரணம் என்றும், ,இதே பயங்கரவாதிகள் தன மீதும் குறி வைத்து இருப்பதாகவும் பேசிய ராகுல், அதை பற்றி தாம் கவலைப்படப்  போவதில்லை.அதனால் தான், நான் தைரியமாக  கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தான், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை மக்கள் புரிந்து கொண்டு ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை மக்கள் விலக்கித் தள்ள வேண்டும்: ராகுல்காந்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com