Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதலை தொடர்ந்து  கொண்டு இருந்தால், இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை நேரில் பார்வையிட்டு, ஷிண்டே ஆய்வு நடத்தினார். ஷிண்டேவுடன் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் உடன் இருந்தார்.

இதை அடுத்துத் தான் பாகிஸ்தான் வீரர்கள் காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதியான 4 பகுதிகளில் விடிய விடிய தாக்குதல் நடத்தி உள்ளனர். இன்னமும்  தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருந்த நிலையில், ஒரு இந்திய வீரர் பலியானார். 10 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இது மேலும் தொடர்ந்தால், இந்திய வீரர்களும் சும்மா இருக்கமாட்டார்கள், பதில் தாக்குதல் நடத்துவார்கள் என்று ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்தால் பதில் தாக்குதல்:ஷிண்டே எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com