Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நளினியும், முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகிறார்கள். இன்று காலை 7.45 மணிக்கு முருகன் பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினியை சந்தித்து பேசினார்.

அப்போது முருகனிடம் நளினி தன்னை சிறையில் பார்க்க வருபவர்களை சரியாக பார்க்க அனுமதிப்பது இல்லை என்றும் மேலும் தனக்கு வழங்கப்படும் சாப்பாடு சரியில்லை என்றும் தெரிவித்தார். இதை கேட்ட முருகன் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ஜெயிலில் இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முருகன் கூறினார்.

பின்னர் அவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்தார். மதிய உணவு சாப்பிட மறுத்தார்.

சிறை  அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  இதனால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

0 Responses to நளினியை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி மறுப்பு: வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com