மோதல்களினால் நலிந்து போயுள்ள எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனைவரிடமும் உள்ளதாக வடக்கு மாகாண
சபையின் எதிர்க்கட்சித் தலைவரான கந்தசாமி கமலேந்திரன் தனது கன்னி உரையில்
தெரிவித்துள்ளார்.
எமது எதிர்கால இளைய சந்ததிகளின் நலன் காக்கவும் அவர்களுக்கான முன்னேற்றப்பாதையினை வழிகாட்டிச் செல்லவும், சமூகத்தில் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு தனித்துவிடப்பட்டிருக்கும் தமிழ் இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது தோள்கள் மீது சுமைகளாக பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது சம்பிரதாயபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் உரையை ஆற்றியபோதே கந்தசாமி கமலேந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இறுதி மோதல்களில் நாம் இழந்து போன எம் உறவுகளை கண்ணீருடன் நினைவு கூரும் இந்த வேளையில், மோதல்களினால் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான உடல் உள நலன் சார்ந்த வழிகாட்டுதல்கள், சிகிச்சைமுறைகள், நலனோம்பும் செயற்பாடுகளை வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறையினர் விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்றார்.
கல்விக்குப் பெயர் பெற்ற வடபகுதி மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்து கல்வியில் பின் தங்கியுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்றி மீண்டும் கல்வியில் எமது முதல்தரத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். மோதல்களினால் நம் சிறார்கள் பலர் தம் கல்வியை முறையாகத் தொடர முடியவில்லை. பலர் பொருளாதார காரணங்களினாலும், மோதல்கள் ஏற்படுத்திய இழப்புகள் காரணத்தினாலும் கல்வியை இடைநடுவே கைவிட்டுள்ளார்கள். கல்வியை மீண்டும் எமது இளைய சமுதாயத்தினர் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்குரிய வழிகாட்டல்களையும் அதற்கான மூலவளங்களையும் வடமாகாண கல்வியமைச்சு வழங்குவதற்கான ஆயத்தநிலைகளை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to எமது மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது: கந்தசாமி கமலேந்திரன்