வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் கைடியில் அமைந்துள்ள மாகாண சபையின் புதிய கட்டிடத்தில் ஆரம்பித்தது. இலங்கையின் அரசியலமைப்பின் சட்ட வரைபுகளுக்கு அமைய வடக்கு மாகாணத்தின் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அமர்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
முதல் நிகழ்வாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுடைய சத்தியப்பிரமாண உடன்படிக்கை உறுதிப்படுத்தல், உறுப்பினர்களை வழிகாட்டிகள் இருக்கைகளுக்கு அழைத்துச் செல்லுதல் மற்றும் வடக்கு மாகாண சபையின் செயலாளர் அவைக்கு பிரவேசித்தல் ஆகிய இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சபையின் செயலாளரினால் அவைக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர், செயலாளரினால் ஆளுநரின் பிரகடனம் மும்மொழியிலும் வாசிக்கப்பட்டது.
இன்றைய வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வுகளில், அவைத்தலைவர் (தவிசாளர்), பிரதி அவைத்தலைவர் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். அதன் பிரகாரம், அவைத்தலைவராக சி.வி.கே சிவஞானத்தின் பெயரினை, மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா முன்மொழிய மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வழிமொழிந்தார். இதனையடுத்து சி.வி.கே. சிவஞானம் வட மாகாண சபையின் முதலாவது அவைத்தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
பிரதி அவைத்தலைவராக அன்ரனி ஜெகநாதனின் பெயரினை, மாகாண சுகாதர அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் முன்மொழிய மாகாண கடற்தொழில் அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் வழிமொழிந்தார். இதனையடுத்து அவரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவராக செயற்பட வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் கட்சி தலைவர்கள் உரையும் இடம்பெற்றது. இன்று நண்பகல் 12.00 மணியளவில் சபை அமர்வுகள் நிறைவு பெற்றது. வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவைத்தலைவர் அறிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு நிறைவு: அடுத்த அமர்வு நவம்பர் 11ஆம் திகதி