Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு வருகை தந்தால், வடக்கு மாகாணத்திற்கும் வருகை தருமாறு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கிறது. இதில், இந்தியப் பிரதமர் கலந்து கொள்வாரா இல்லையா என்ற முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அது தொடர்பில் நேற்று புதன்கிழமை ஆராய்ந்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில் ஆர்வத்தோடு இருப்பதாக இந்தியா ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும், இறுதி முடிவுகள் ஏதும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே, சிலவேளை பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை வந்தால் வடக்கு மாகாணத்திற்கும் வருகை தர வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. அப்படியான விஜயம் சாத்தியப்படும் போது இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவத்துடன் நோக்கப்படும்.

0 Responses to பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்தால், வடக்கிற்கு வருமாறு மன்மோகனுக்கு அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com