பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, (இலங்கை மத்திய) அரசாங்கம் அழைப்பு விடுத்தல் அதில், கலந்து கொள்வதா இல்லையா என்று முடிவு எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்று இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அதற்கான அழைப்பு கடிதமும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று நம்புகிறேன். கிடைத்த பின்னரே முடிவை அறிவிக்க முடியும். அதுதான் சரியாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்திருந்த அமெரிக்க தூதுவர் சிசன், வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர். அதன்போதே, பொதுநலவாய மாநாடு குறித்த கேள்வியொன்றுக்கு சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இதனிடையே, பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்கிற தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அழைப்பு கிடைத்தால், பொதுநலவாய மாநாடு தொடர்பில் தீர்மானிக்கப்படும் : சி.வி.விக்னேஸ்வரன்