வடமாகாண சபைத் தேர்தலின் போது, அதிக இராணுவ தலையீடுகள் இருந்ததாக பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பு குழு குற்றம் சுமத்தி இருந்தாலும், சிறீலங்காவின் அரசியல் நிலைமைகளை பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஸ் சர்மா வரவேற்றுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுநலவாய நாடுகளின் குழுவினர், இன்று தமது இறுதி அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
இதில் பொது மக்கள் மற்றும் அரச நிர்வாகங்களின் செயற்பாடுகளின் வடமாகாணத்தில் அதீத இராணுவத் தலையீடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் இந்த அறிக்கையை இன்று வெளியிட்டு வைத்த கமலேஸ் சர்மா, இந்த குற்றச்சாட்டுகள் எவற்றையும் பொருட்படுத்தாது, தற்போது சிறீலங்காவின் அரசியல் சூழ்நிலை சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் மீளமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே கமலேஸ் சர்மா, தற்போது சிறீலங்கா அரசாங்கத்தின் தலையாட்டி பொம்மையாக செயற்பட்டு வருவதாக கனடா குற்றம் சுமத்தி இருந்தமையும், அதனை அவர் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தற்போது சிறீலங்காவின் அரசியல் சூழ்நிலை சிறப்பாக இருக்கிறது என்கிறார் கமலேஸ் சர்மா