பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை
எடுக்க வேண்டும் என்று சர்வதே மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதன்
ஆசிய பசுபிக் உதவி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை
விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் கவலைத் தருவதாக அமைந்துள்ளன. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த தீர்மானித்திருப்பது, ஆபாத்தானதும், அதேநேரம் கவலைத் தரும் விடயமாகாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை உரியவகையில் பதில் வழங்கமாறு, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் விசேட முன்னெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் எந்த பொறுப்பினையும் இலங்கைக்கு வழங்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் - சர்வதே மன்னிப்பு சபை