Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை பரப்பும் இயந்திரம் இல்லை என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடமாகாண மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கான முழுமையான தீர்வு கிடைப்பதற்காகவும், அபிவிருத்திகள் கிராமிய ரீதியாக சென்றடைவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் கொள்கையின் பொருட்டும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவுமே செயற்படுவதாக தென்னிலங்கையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை பரப்பும் இயந்திரங்கள் இல்லை என்பதை புரிந்தக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை வடக்கில் காணப்படுகின்ற இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள சம்பந்தன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்கள் சிவில் பிரதிநிகளாக இருக்க வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை பரப்பும் இயந்திரம் இல்லை - இரா.சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com