நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை, எமது
மாவீரர்களும் தமது சாவுடன் போராட்டம் முடிந்து விடும் என்று
நினைக்கவில்லை.
அதே போல் தான் எங்கள் பரிதி அவர்கள் தனது சிறுவயதில் இருந்து தமிழ் மக்களின் நீதியான உரிமைக்கான போராட்டத்தை தமிழீழ மண்ணிலும் விழுப்புண் கண்டு தமிழீழ மண்ணை விட்டு புலம்பெயர நேர்ந்த போதும் தான் எடுத்த சத்திய பிரமாணத்துக்கு அமைய புலம்பெயர் மக்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் விடுதலையை மட்டும் நோக்கமாக கொண்டு,
எந்த வித பிரதிபலன்களை எதிர்பார்க்காமால் மண் மீட்பை மட்டும் தம் நோக்கங்களாகவும் இலட்சியமாகவும் வாழ்ந்து உயிர் நீத்த மாவீரர்களில் பரிதி அண்ணனும் ஒருவர்.
அவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில், குற்றவாளிகளை தெரிந்தும், இந்த நாட்டு அரசின் நீதி விசாரணை குற்றவாளிகளை, அல்லது குற்றவாளி அரசுகளை பாதுகாக்கும் செயலானது, தாய்நாட்டிலும் புலத்திலும் நீதியை தேடி நீற்கும் எம்மை போன்ற மக்களுக்கு, எங்களுக்கு நீதி வேண்டும் என்ற நோக்கத்தை மேலுயார்த்தி வைக்கிறது.
ஏற்கனவே இதே காலப்பகுதியில் தான் 17 வருடங்களுக்கு முதல் நாதன், கஜன், 2 போராளிகள் இதே பிரான்சு நாட்டில் தமிழ் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்கள்.
அவர்களுக்கான நீதி இதுவரை வழங்கப்படவில்லை.
எமது மண்ணில் 1948 ல் இருந்து தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்குள்ளாகி, தமிழ் மண் பறிக்கப்பட்டு, முள்ளிவாய்காலில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகள் படுகொலை செயப்பட்டார்கள், 1,46,679 எமது சகோதர சகோதரிகளை நாம் இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறோம்.
ஐக்கிய நாடுகள் சபை தாம் தவறு செய்து விட்டோம் என்று கூறி இருக்கும் தற்போதைய நிலையில், தவறுகள் செய்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்பதே நியாயம் என்பதற்கமைய இந்நாட்டில் நடைபெற்ற பரிதி, நாதன், கஜன் ஆகியோரின் படுகொலைக்கு நீதியான விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த வேண்டியது பிரான்சு அரசின் கடமையாகும்.
இதற்கான நீதியை தமிழர்களாகிய நாங்கள் அமைதி காக்காமல் கேட்கவேண்டியது எமது கடமை. அதற்காக ஒரு முறைப்பாட்டு (Petition) உங்களுக்காக, வியாபார நிலையங்களில், பாடசாலைகளில், மற்றும் உங்களிடமும் எமது அங்கத்தவர்கள் எடுத்து வருவார்கள், அதில் நாங்கள் ஒவ்வொருவரும் கையொப்பங்களை இட்டு, பிரான்சு அரசிடம் நீதி கேட்போம்.
அத்துடன் நவம்பர் 8 ஆம் திகதி பரிசு நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள Place de la Fontaine- Saint Michel என்னும் இடத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு ஐரோப்பிய தமிழ் மக்களுடன் சேர்ந்து மாபெரும் நீதிக்கான போராட்டப் பேரணி ஆரம்பமாகி பிரான்சு பாராளுமன்றம் முன்றலில் நீதிக்கு குரல் கொடுப்போம்.
அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு இப்பேரணியின் மூலம் எமது வலிமையையும், ஒற்றுமையையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவோம்.
“ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மனித நிகழ்வல்ல, அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் ஆற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அனைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மாற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” (தமிழீழ தேசியத் தலைவர்)
தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு

0 Responses to நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை: தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு