Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவட்ட அபிவிருத்தி அமைச்சர்களை நியமிப்பதன் ஊடாக, வடமாகாண சபையின் இயக்கத்தை முழுமையாக ஸ்தம்பிக்க செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 24ம் திகதி இவ்வாற மாவட்ட அபிவிருத்தி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதன்படி கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவும், முல்லைத்தீவுக்கு சிங்களவர் ஒருவரும் மன்னாருக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்படும் அதேநேரம், வவுனியாவுக்கு உதயராசா நியமிக்கப்படவுள்ளார்.

இந்த அமைச்சுகள் அனைத்தும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபையை சுயமாக இயங்க விடாமல் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

1 Response to வடமாகாண சபையின் இயக்கத்தை முழுமையாக ஸ்தம்பிக்க செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

  1. DEVADAS Says:
  2. INTHA SEYAL MURY ADIKAPADUM. ITHATKU MATRU MARUNTHU UNDU. ATHAIKANDU BASIL NADUNKUVAR. EVARGALIN UL NOKAM VELY ULAKATHUKU VETTA VELICHAMAHA THERIYUM.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com